

புதுடெல்லி,
புதிய வருமான வரி சட்டம் வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. விதிகளும் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதற்கான விதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* சட்டத்தின் பிரிவுகள் 819-ல் இருந்து 536 ஆக குறைக்கப்படுகிறது.
* கடினமான வார்த்தைகளுக்கு பதிலாக 39 புதிய அட்டவணைகள் மற்றும் 40 சூத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
* ஹெச்.ஆர்.ஏ. சலுகையில், 50 சதவீதம் விலக்கு பெறும் நகரங்கள் 4-ல் இருந்து 8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* ஹெச்.ஆர்.ஏ. சலுகை பெற வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் குறித்த தகவல்கள் இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் வங்கியில் டெபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* ரூ.5 லட்சத்துக்கும் மேலான விலையில் வாகனங்கள் வாங்கினால் பான் கார்டு கட்டாயமாகும்.
* ரூ.1 லட்சத்திற்கும் மேல் ஓட்டல்களில் பணம் கட்டினாலோ, நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்தாலோ பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* ரூ.20 லட்சத்துக்கு மேல் சொத்து பரிவர்த்தனைக்கு பான் கார்டு கட்டாயம்.
* டிஜிட்டல் கரன்சியான கிரிப்டோ பரிவர்த்தனை விவரங்களை வரி துறைக்கு வழங்குதல் கட்டாயமாகும்.
* ரிசர்வ் வங்கியில் டிஜிட்டல் கரன்சியான சி.பி.டி.சி., அங்கீகரிக்கப்பட்ட பண பரிமாற்ற முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.