இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள் - அண்ணாமலை

அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைந்திருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வந்த நிலையில், ரம்ஜான் முடிவுக்கு வந்ததற்கான அறிகுறியாக பிறை சந்திரன் நேற்றிரவு தெரிந்தது. இதைத் தொடர்ந்து இன்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

Also Read
மருமகளுடன் தகராறு செய்த மாமியார் வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
கோப்புப்படம்

இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

Also Read
காதலன் ஏமாற்றியதால் விரக்தி: கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை
கோப்புப்படம்

புனித ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புனித நாளில், அனைவரிடமும் அமைதி, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் நிலைத்திருக்கவும், அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைந்திருக்கவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also Read
அதிமுக இனி எந்த காலத்திலும் ஜெயிக்காது - ஓ.பன்னீர்செல்வம்
கோப்புப்படம்
X

Daily Thanthi
www.dailythanthi.com