பெட்ரோல், டீசல் வரி குறைப்பால் பணவீக்கம் குறைவு: ரிசர்வ் வங்கி கவர்னர் கருத்து

பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு பணவீக்கம் குறைவதற்கு சாதகமானதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், மும்பையில் நேற்று கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்திருப்பது, குறிப்பிடத்தக்க அளவில் பணவீக்கம் (விலைவாசி) குறைவதற்கு சாதகமாக அமைந்துள்ளது.

தற்போது உணவுப்பொருட்கள் மீதான பணவீக்கம், கட்டுக்குள் உள்ளது. அதே நேரத்தில் முக்கிய பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. இது ஒரு கொள்கை சவால் ஆகும். முக்கிய பணவீக்க உயர்வு குறித்து நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

இந்தியாவில் பணவீக்கம், வினியோக தரப்பு காரணிகளை பொறுத்தே அமைந்துள்ளது. இந்த வினியோக தரப்பு காரணிகளை, குறிப்பாக பயறு வகைகள், சமையல் எண்ணெய்கள் மீதானவற்றை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது. இவையெல்லாம் பணவீக்கம் குறைவதற்கு சாதகமாக உள்ளன. எரிபொருட்கள் மீதான பணவீக்கமும் உயர்ந்துள்ளது. அதை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com