ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் மந்திரி சிறையில் அடைப்பு

நீர்வளத்துறை முன்னாள் தலைவர் உதித் பிரகாஷ் ராய் மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சத்யேந்தர் ஜெயின்
Published on

புதுடெல்லி,

ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் மந்திரி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த ஆட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டங்களில் முறைகேடு நடந்ததாக கடந்த 2024-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டார்.

நீதிபதி உத்தரவு

அவருடன் நீர்வளத்துறை முன்னாள் தலைவர் உதித் பிரகாஷ் ராய் மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சத்யேந்தர் ஜெயின் உள்பட கைதான அனைவரும் நேற்று சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com