‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டுக்காக டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

4-வது முறையாக இந்தியா தலைமை தாங்கி இந்த மாநாட்டை நடத்துகிறது.
‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டுக்காக டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு
Published on

புதுடெல்லி,

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள 'பிரிக்ஸ்' அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் வருகிற 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெறுகிறது. 4-வது முறையாக இந்தியா தலைமை தாங்கி மாநாட்டை நடத்துகிறது. இது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் டெல்லி மாநகராட்சி சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, பொதுவான முன்னுரிமைகள் மற்றும் உலகளாவிய, பிராந்திய விவகாரங்கள் குறித்து தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com