கொரோனா தடுப்பூசி திட்டத்தில் இமாசல பிரதேசம் சாம்பியன்; பிரதமர் மோடி புகழாரம்

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் இமாசல பிரதேசம் சாம்பியன் ஆக உருவெடுத்து உள்ளது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி திட்டத்தில் இமாசல பிரதேசம் சாம்பியன்; பிரதமர் மோடி புகழாரம்
Published on

புதுடெல்லி,

இமாசல பிரதேசத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 100 சதவீதம் அளவுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டு உள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக இந்த சாதனை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இமாசல பிரதேச சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி பயனாளர்களிடம் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே இன்று பேசினார். அவர் கூறும்போது, இமாசல பிரதேசம் சாம்பியன் ஆக உருவெடுத்து உள்ளது.

இமாசல பிரதேசத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 100 சதவீதம் அளவுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டு நாட்டின் முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதேபோன்று, மக்கள் தொகையில் 3ல் ஒரு பங்கு நபர்களுக்கு 2வது டோஸ் போடப்பட்டு உள்ளது.

அடிப்படை வசதிகளை பெறவே இமாசல பிரதேசம் அதிகம் போராடியது. ஆனால, இன்று சிறந்த முறையில் செயலாற்றுகிறது. ஒரு மலை சார்ந்த மாநிலம் என்ற வகையில் போக்குவரத்து, சேமிப்பு என பல தடைகளை சந்தித்தது.

ஆனால், கொரோனா தடுப்பூசி திட்டத்தில் மாநில அரசு திறம்பட கையாண்டு உள்ளது. இதற்காக அரசுக்கும், அரசு குழுவினருக்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com