

அமிர்தசரஸ்,
மத்திய மந்திரி நிதின் கட்காரி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பா.ஜனதா வேட்பாளர் ஹர்தீப் புரியை ஆதரித்து நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பாகிஸ்தானுக்கு அமைதியின் அடிப்படையில் இந்தியா தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை 1960-ல் ஏற்படுத்தியது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாதம் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்துக்கு ஆதரவு தருவதை நிறுத்தாவிட்டால் அந்த நாட்டுக்கு தண்ணீர் வழங்குவதை தடுத்து நிறுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.