

உலக அரங்கில் இந்திய தங்கச் சந்தை புதிய வரலாறு சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1,200 டன் தங்கம் சுத்திகரிப்பு செய்யும் அசுர கட்டமைப்பு வசதி உருவாகியுள்ளது. ஆனால், நம் நாட்டில் ஆண்டு தங்கம் நுகர்வு வெறும் 800 முதல் 850 டன்களாக மட்டுமே உள்ளது.
இதனால் மீதமுள்ள உபரி தங்கத்தை உலக நாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அதிரடி திட்டம் தீட்டியுள்ளது. இதற்காக குஜராத் கிப்ட் சிட்டி மூலம் புதிய உலகளாவிய வர்த்தக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் இனி சர்வதேச தங்க வர்த்தக மையமாக உருவெடுக்க வழிவகை பிறந்துள்ளது.