பாகிஸ்தான், சீனாவை முந்தும் இந்திய ஜவுளி துறை… அமெரிக்கா திறந்த பெரிய வாய்ப்பு

இந்திய ஜவுளி மற்றும் ஆடைகள் துறைக்கு மிகப்பெரிய ஏற்றுமதி வாய்ப்பு உருவாகியுள்ளது.
பாகிஸ்தான், சீனாவை முந்தும் இந்திய ஜவுளி துறை… அமெரிக்கா திறந்த பெரிய வாய்ப்பு
Published on

புது டெல்லி,

இந்தியா-அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்த செயல்திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய ஜவுளி மற்றும் ஆடைகள் துறைக்கு மிகப்பெரிய ஏற்றுமதி வாய்ப்பு உருவாகியுள்ளது.

அமெரிக்காவில் சுமார் ரூ.10.70 லட்சம் கோடி மதிப்பிலான ஜவுளி மற்றும் ஆடைகள் சந்தையில், இந்திய ஏற்றுமதியாளர்கள் பெருமளவில் பங்கேற்க வழிவகுக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு போட்டியாக உள்ள வங்கதேசம், சீனா, பாகிஸ்தான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைவிட இந்தியா முன்னிலை பெறும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க சந்தையில் இந்திய ஜவுளி பொருட்களுக்கு தேவையும், போட்டித்திறனும் அதிகரிக்கும் என தொழில் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

Also Read
வர்த்தக ஒப்பந்தத்துக்கு விவசாய அமைப்புகள் எதிர்ப்பு; 12-ந்தேதி போராட்டத்துக்கு அழைப்பு
பாகிஸ்தான், சீனாவை முந்தும் இந்திய ஜவுளி துறை… அமெரிக்கா திறந்த பெரிய வாய்ப்பு

இதனால், இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கிய பங்காற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com