கோவாவில் இரும்புத்தாது சுரங்க மோசடி; ரூ.1,000 கோடி சொத்து முடக்கம்

அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கு பதிவு செய்தது.
கோவாவில் இரும்புத்தாது சுரங்க மோசடி; ரூ.1,000 கோடி சொத்து முடக்கம்
Published on

புதுடெல்லி,

கோவா மாநிலத்தில் சல்கோவாகார் குரூப்ஸ் அண்ட் அசோசி யேட்ஸ் என்ற நிறுவனம் சட்டவிரோதமாக இரும்புத்தாதுகளை பெருமளவில் வெட்டி எடுத்துள்ளது. அவற்றை சீனாவுக்கு அதிக விலையில் விற்பனை செய்தது. இதுதொடர்பாக அந்நிறுவனம் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கு பதிவு செய்தது.

இவ்வழக்கில், இந்தியாவில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 99 அசையா சொத்துகளையும் (ரூ.459 கோடி மதிப்பு), சிங்கப்பூரில் உள்ள 31 அசையா சொத்துகளையும் (ரூ.471 கோடி மதிப்பு), இந்திய நிறுவனங்களில் உள்ள சமபங்குகளையும் (ரூ.93 கோடி மதிப்பு) அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com