டெல்லியில் சோனியா காந்தியுடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சந்திப்பு

டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சந்தித்து பேசினார்.
டெல்லியில் சோனியா காந்தியுடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சந்திப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் டி.கே.சிவக்குமார் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். பின்னர் டெல்லியில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை, டி.கே.சிவக்குமார் சந்தித்து பேசினார். அரை மணிநேரத்திற்கும் மேலாக சோனியா காந்தியுடன், டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தி இருந்தார்.

கர்நாடகத்தில் காலியாக உள்ள 25 மேல்-சபை உறுப்பினர்களுக்கு தோதல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. இதையடுத்து, வேட்பாளர்கள் தேர்வு குறித்து சோனியா காந்தியுடன், டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தி, அவரிடம் வேட்பாளர்களின் பட்டியலை கொடுத்து அனுமதி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக பெங்களூரு, கோலார், மைசூரு மாவட்டங்களில் வேட்பாளர்கள் தேர்வில் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருவதால், அந்த 3 மாவட்டங்களில் வேட்பாளர்களாக யாரை நிறுத்துவது என்பது குறித்தும் சோனியா காந்தியுடன், டி.கே.சிவக்குமார் ஆலோசித்ததாக தெரிகிறது. மேலும் கர்நாடக அரசியல் குறித்தும் 2 பேரும் விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மாநிலத்தில் தற்போது பிட்காயின் முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பது குறித்தும், அந்த பிரச்சினையை தீவிரமாக கையில் எடுத்து செயல்படும்படியும் டி.கே.சிவக்குமாரிடம், சோனியா காந்தி கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து டி.கே.சிவக்குமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினேன். குறிப்பாக கர்நாடக அரசியல், கட்சி சம்பந்தப்பட்டது குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசித்தேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com