கெஜ்ரிவால் செய்தது மிகப்பெரிய அரசியல் பிழை: பிரசாந்த் கிஷோர் விமர்சனம்

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடித்ததுள்ளது.
கெஜ்ரிவால் செய்தது மிகப்பெரிய அரசியல் பிழை: பிரசாந்த் கிஷோர் விமர்சனம்
Published on

புதுடெல்லி,

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவு நேற்று வெளியானது. இதில் 48 இடங்களில் அமோக வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே பிடித்தது.

முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்தார். கடந்த 2 முறை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கட்டிலில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பெரும் பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து, தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வேறு ஒருவரை முதல்-மந்திரியாக நியமித்தது கெஜ்ரிவால் செய்த மிகப்பெரிய அரசியல் பிழை என ஜன் சுராஜ் கட்சித்தலைவர் பிரசாந்த் கிஷோர் விமர்சனம் செய்துள்ளார். இந்த வழக்கில் கெஜ்ரிவால் கைதான உடனேயே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com