மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை நிரப்பி வருகிறது.
மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை
Published on

புதுடெல்லி,

மதுபான விற்பனை மீதான கலால் வரி மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் வருவாய் நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல்-மே) 82 சதவீதம் வரை அசுர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வெளியிட்டுள்ள 10 முக்கிய மாநிலங்களின் மாதாந்திர நிதி ஆதாரப் புள்ளிவிவரங்களின்படி, அதிகபட்சமாக அரியானா மாநிலம் 82 சதவீதத்திற்கும் மேலான வருவாய் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

அதே நேரத்தில், ஒட்டுமொத்த வருவாய் அளவில் உத்தரப் பிரதேசம் ரூ.10 ஆயிரத்து 600 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி முதலிடத்தைப் பிடித்துள்ளது. நாடு முழுவதும் மதுபான நுகர்வு மற்றும் விற்பனை 14 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com