மத்தியபிரதேசம்: கிணற்றுக்குள் இறந்து கிடந்த 13 மான்கள்

மத்தியபிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
கோப்புப்படம்
Published on

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றுக்குள் இறந்து கிடந்த 13 மான்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கிணற்றில் 13 மான்கள், 1 நாய் இறந்து கிடந்தன

மத்தியபிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து சென்று கிணற்றைச் சோதனை செய்தபோது, அழுகிய நிலையில் 13 மான்கள் மற்றும் ஒரு தெரு நாய் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை

தெருநாய்கள் துரத்தியதால் தப்பி ஓட முயன்ற மான்கள், கிணற்றின் சுவர் உடைந்திருந்ததால் உள்ளே விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உடற்கூறாய்வுக்குப் பின் மான்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com