கேரளாவில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு; காங்கிரஸ் கட்சி வாக்குறுதி

படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கேரளாவில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு; காங்கிரஸ் கட்சி வாக்குறுதி
Published on

கேரள மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணி கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி நேற்று எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் வெளியிட்டார். அதில் இடம்பெற்ற வாக்குறுதிகள் விவரம் வருமாறு:-

  • இந்திரா உத்தரவாதம் அடிப்படையில், கேரள அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும்.

  • கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும். ஓய்வூதியத் தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.

  • உம்மன் சாண்டி சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும்

  • படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

  • பெண்களுக்கு 'குடும்பஸ்ரீ' என்ற மகளிர் சுய உதவிக்குழு போல, ஆண்களுக்கு சுய உதவிக்குழுவாக 'யுவஸ்ரீ' என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

  • ஆன்லைன் டாக்சி திட்டத்தில் ஏற்படும் குறைபாடுகளை பரிசீலித்து, அவற்றை உரிய முறையில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் டாக்சி வாடிக்கையாளர்களுக்காக 24 மணி நேரமும் இயங்கும் உதவி மையம் அமைக்கப்படும்.

  • அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் தரையில் கிடக்கும் நிலையை மாற்றி, சிகிச்சைக்காக அனுமதிக்கும்போது கட்டாயமாக படுக்கை வசதி செய்து தரப்படும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com