

பெங்களூரு,
தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், மேகதாது அணையை கட்டியே தீருவோம் என அம்மாநில முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்து இருப்பதாவது;
“மேகதாது அணை கட்டப்படும் என கூறியதற்காக மாணிக்கம் தாகூர் வெளியிட்ட கண்டனத்தை நான் பொருட்படுத்தவில்லை. யார் கண்டனம் தெரிவித்தால் என்ன? கர்நாடக நலனுக்காக மேகதாது அணை கட்டப்படும். யார் கண்டனம் தெரிவித்தாலும் நாட்டின் சட்டத்தை அனைவரும் மதித்து தான் ஆக வேண்டும். தமிழ்நாட்டிற்கு 177 டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பது தான் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஆகும்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி 177 டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றால் மேகதாது அணை கட்டப்பட வேண்டும். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கவே மேகதாது அணை கட்டப்படுகிறது. மேகதாது அணையை கட்டினால் தான் தமிழ்நாட்டிற்கு உரிய 177 டிஎம்சி தண்ணீரை வழங்க இயலும். அவர்கள் (தமிழ்நாடு அரசு) ஒரு தூதுக்குழுவுடன் வரட்டும். இந்தத் திட்டம் அவர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை நான் அவர்களுக்குக் காண்பித்து விளக்குவேன். ”
இவ்வாறு அவர் கூறினார்.