மும்பை விமான நிலையத்தில் போதைமாத்திரைகள் பறிமுதல் - இளம்பெண் கைது

போதை மாத்திரைகள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மும்பை விமான நிலையத்தில் போதைமாத்திரைகள் பறிமுதல் - இளம்பெண் கைது
Published on

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் போதைமாத்திரைகளுடன் வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

போதை மாத்திரைகள் பறிமுதல்

தலைநகர் டெல்லியில் இருந்து இன்று மராட்டிய மாநிலம் மும்பைக்கு இன்று விமானம் வந்தது. அந்த விமானத்தில் போதை மாத்திரைகள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சபானா (வயது 27) என்ற பெண் பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் 500 கிராம் போதை மாத்திரைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அப்பயணியை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com