முதுநிலை நீட் வினாத்தாள் கசிந்ததா? - மத்திய அரசு விளக்கம்

முதுநிலை நீட் தோவுகள் டெலிகிராம் செயலி மூலம் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளத்தில் வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது
முதுநிலை நீட் வினாத்தாள் கசிந்ததா? - மத்திய அரசு விளக்கம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் அரசு, தனியா மருத்துவக் கல்லூரிகள், நிகாநிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேவு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு நீட் தேவு வரும் 11-ஆம் தேதி நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், நீட் முதுநிலை தேவு வினாத்தாள் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளமான டெலிகிராமில் தகவல் பரவியது. ஏற்கனவே இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேவு வினாத்தாள் கசிந்தது பெரும் அதிவலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது முதுநிலை நீட் தேவுக்கான வினாத்தாள் விற்பனைக்கு இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது..

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் மத்திய அரசு வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது. வினாத்தாள் கசிவு என்று சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. இன்னும் வினாத்தாள் தயாரிக்கப்படவில்லை. வினாத்தாள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரப்பியவாகள் மீது தேசிய மருத்துவ அறிவியல் தேவுகள் வாரியத்தால் காவல் துறையில் புகா அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com