நேபாள பிரதமர் பாலேந்திர ஷா இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் நாளை முக்கிய பேச்சுவார்த்தை

இந்தியா - நேபாளம் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் லிபுலேக், காலாபானி, லிம்பியாதுரா எல்லைப் பிரச்சினைகள் குறித்தும் இந்த பயணத்தின்போது ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
நேபாள பிரதமர் பாலேந்திர ஷா இந்தியா வருகை:  பிரதமர் மோடியுடன்  நாளை முக்கிய பேச்சுவார்த்தை
Published on: 

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா 2 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள், வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.நேபாளத்தில் கடந்த மார்ச் மாதம் பிரதமராக பொறுப்பேற்ற பாலேந்திர ஷா, முதல் முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லி வந்த அவரை மத்திய மந்திரி ஜிதின் பிரசாதா வரவேற்றார். 34 பேர் கொண்ட உயர்மட்ட குழுவுடன் இந்தியா வந்துள்ள பாலேந்திர ஷா, நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

மோடியுடன் நாளை சந்திப்பு

இந்த பயணத்தின்போது நாளை (நவம்பர் 23) பிரதமர் மோடியுடன் பாலேந்திர ஷா இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இந்தியா - நேபாளம் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது, வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு, நீர்மின் திட்டங்கள், ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து, விமான இணைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே எரிசக்தி தொடர்பான சில திட்டங்களை இரு தலைவர்களும் கூட்டாக தொடங்கி வைக்க உள்ளனர். பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்பட உள்ளன.

ஜனாதிபதியை சந்திக்கிறார்

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் பாலேந்திர ஷா சந்திக்கிறார். டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். மேலும், இந்தியா - நேபாளம் வர்த்தக மன்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

எல்லைப் பிரச்சினை குறித்து ஆலோசனை?

இந்தியா - நேபாளம் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் லிபுலேக், காலாபானி, லிம்பியாதுரா எல்லைப் பிரச்சினைகள் குறித்தும் இந்த பயணத்தின்போது ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், இந்திய ராணுவத்தில் நேபாளத்தைச் சேர்ந்த கூர்க்கா வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான கருத்து வேறுபாடுகள், இரு நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்து இணைப்பு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தின் மறுகட்டமைப்புக்கு இந்தியா வழங்கும் உதவிகள் உள்ளிட்ட விவகாரங்களும் பேச்சுவார்த்தையில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X