பிரதமர் மோடியுடன் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா சந்திப்பு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி மற்றும் நேபாளத்தின் ஜனக்பூர் இடையே புதிய வாராந்திர விரைவு ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது
பாலேந்திர ஷா
பாலேந்திர ஷா -மோடி
Published on: 

நேபாள நாட்டின் பிரதமர் பாலேந்திர ஷா, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் அவரை வரவேற்றார். மூத்த அதிகாரிகளையும் பிரதமர் மோடி அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

முக்கிய ஆலோசனை

இதையடுத்து டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இருநாட்டு தலைவர்கள் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பின்போது இந்தியா - நேபாளம் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, வர்த்தகம், எரிசக்தி, நீர்மின் திட்டங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ரயில் சேவை

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே கல்வி, சுகாதாரம், விவசாயம், விண்வெளி, பேரிடர் மேலாண்மை மற்றும் மனிதவள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதற்கிடையே, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி மற்றும் நேபாளத்தின் ஜனக்பூர் இடையே புதிய வாராந்திர விரைவு ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சரயு - கமலா எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவும் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தனர். 604 கிலோமீட்டர் தொலைவை கொண்ட இந்த ரெயில் பயணம் சுமார் 19 மணி நேரம் ஆகும். வருகிற 28-ந்தேதி முதல் இந்த ரெயில் வழக்கமான சேவையை தொடங்க உள்ளது.

ஜனாதிபதியையும் சந்திக்கிறார்

பயணத்தின்போது ரெயில் மாற வேண்டிய அவசியமில்லை.அயோத்தி ராமரின் பிறப்பிடமாகவும், ஜனக்பூர் சீதையின் பிறப்பிடமாகவும் கருதப்படுவதால், இந்த ரெயில் சேவை இரு நாடுகளுக்கு இடையிலான ஆன்மிக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவுக்கு வந்துள்ள பாலேந்திர ஷா, இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் சந்திக்க உள்ளார்

X