நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, மோசடி புகார்களை தெரிவிக்க இணையதள பக்கம் தொடக்கம்


நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, மோசடி புகார்களை தெரிவிக்க இணையதள பக்கம் தொடக்கம்
x

2024 நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லி,

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மாணவ,மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.

இதனிடையே, கடந்த ஆண்டு (2024) நீட் தேர்வின்போது வினாத்தாள் கசிந்தது. இந்த விவகாரம் பெரும் பூதாகாரமான நிலையில் பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நடப்பு ஆண்டு நீட் தேர்வின்போது வினாத்தாள் கசிவு, மோசடி தொடர்பான புகார்களை தெரிவிக்க தேசிய தேர்வு முகமை புதிய இணையதள பக்கத்தை தொடங்கியுள்ளது.

NEET.NTA.AC.IN அல்லது NTA.AC.IN இணையதளங்களின் வழியாக புகாரளிக்கலாம். புகார்களை ஆதாரத்துடன் இதில் பதிவு செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆசை காட்டி மோசடியில் ஈடுபடுவோரை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story