நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை

நித்யஸ்ரீ அரசு நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை
Published on

புதுச்சேரி,

முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் தினேஷ் (வயது 43). டிரைவர். அவரது மனைவி கலைச்செல்வி (40). இவர்களது மகள் நித்யஸ்ரீ (19). இவர் அரசு நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நித்யஸ்ரீ நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். பின்னர் அவர் வீட்டில் உள்ள அறை ஒன்றில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com