ஓணம் பண்டிகை மக்களிடையே மகிழ்ச்சி, ஒற்றுமை, செழிப்பு ஆகிய உணர்வுகளை வளர்க்கிறது: பிரதமர் மோடி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துகள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஓணம் பண்டிகை- பிரதமர் மோடி வாழ்த்து.
Published on

புது தில்லி,

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் மகாபலி மன்னரை வரவேற்கும் விதமாக அறுவடை திருவிழாவான ஓணம் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர். இந்த நிலையில ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

அறுவடை திருவிழா

புதன்கிழமையான இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துகள். இந்த அறுவடை திருவிழா மக்களிடையே மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் செழிப்பு ஆகிய உணர்வுகளை மேலும் வளர்க்கிறது.

ஓணம் பண்டிகை வாழ்த்து

இனிய ஓணம் பண்டிகை வாழ்த்துகள். இது உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு துடிப்பான பண்டிகையாகும்.

ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் முதன்மையாகக் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் செழிப்பு ஆகிய உணர்வுகளை மக்களிடையே மேலும் வளர்க்கட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com