உலக பயங்கரவாத குறியீட்டில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தான்

டி.டி.பி. அமைப்பானது, அந்நாட்டில் கொடிய பயங்கரவாத குழுவாக தன்னை நிலைநிறுத்தி கொண்டதுடன், உலக அளவில் 3-வது கொடிய பயங்கரவாத அமைப்பாகவும் உள்ளது.

உலக பயங்கரவாத குறியீட்டில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தான்
Published on

லாகூர்

உலக அளவில் 163 நாடுகளில் பயங்கரவாத தாக்கம் தொடர்பாக பொருளாதாரம் மற்றும் அமைதி மையம் விரிவான ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.இது தொடர்பான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டில் பாகிஸ்தான் முதல் இடம் பிடித்துள்ளது.

இதில், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் பகைமையுடனான உறவை வளர்த்தது, தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் (டி.டி.பி.) மற்றும் பலூசிஸ்தான் ராணுவம் போன்றவற்றால் அதிகரித்து வரும் வன்முறை ஆகிய தாக்கங்களால் பாகிஸ்தான் முதன்முறையாக இந்த நிலைமைக்கு சென்றடைந்துள்ளது. இதனால், அந்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பில் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

Also Read
விடுமுறையே இல்லாமல் 24 ஆண்டுகள்... பிரதமர் மோடிக்கு அமித்ஷா புகழாரம்

உலக பயங்கரவாத குறியீட்டில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தான்

இதேபோன்று, 2013-ம் ஆண்டில் இருந்து இதுவரையில், பாகிஸ்தானில் பயங்கரவாதம் தொடர்பான மரண எண்ணிக்கையும் பெரிய அளவில் அதிகரித்து உள்ளது. 2025-ம் ஆண்டில் 1,139 பயங்கரவாதம் தொடர்பான மரணங்களும், 1,045 பயங்கரவாத சம்பவங்களும் நடந்துள்ளன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

இதில், டி.டி.பி. அமைப்பானது, அந்நாட்டில் கொடிய பயங்கரவாத குழுவாக தன்னை நிலைநிறுத்தி கொண்டதுடன், உலக அளவில் 3-வது கொடிய பயங்கரவாத அமைப்பாகவும் உள்ளது. அதனுடன் கடந்த ஆண்டில், உலகளவில் உள்ள 4 பெரிய பயங்கரவாத குழுக்களில் தன்னுடைய செயல்பாட்டை அதிகரித்த ஒரேயொரு இயக்கம் ஆகவும் இந்த டி.டி.பி. உருவெடுத்து உள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com