

புது டெல்லி,
பாஜக புதிய தேசிய நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பாஜகவின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து தேசியப் பொறுப்பாளர்களுக்கும், கட்சியில் பல்வேறு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்த ஆற்றல்மிக்க குழு, ஏராளமான அமைப்பு ரீதியான அனுபவத்தை மட்டுமல்லாமல், வலுவான அடிமட்டத் தொடர்பையும் கொண்டுள்ளது. நமது இந்தத் தோழர்கள், முழு அர்ப்பணிப்புடன், பொதுநலப் பணிகளை முன்னெடுத்து செல்வதோடு, கட்சியையும் வலுப்படுத்துவார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.