ஜனநாயகத்தை பிரதமர் மோடி அழிக்க நினைக்கிறார் : மல்லிகார்ஜுன கார்கே காட்டம்

காங்கிரஸ் கட்சி மற்றும் ஜனநாயகத்தை அழிக்கும் நோக்கில் பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே
Published on

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது; “மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது சட்டவிரோதம், அறநெறிக்கு எதிரானது மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்தச் சம்பவம் பிரதமர் மோடியின் உத்தரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது. காங்கிரஸ் கட்சி மற்றும் ஜனநாயகத்தை அழிக்கும் நோக்கில் பிரதமர் மோடி இதை செய்துள்ளார்.

முக்கிய பதவிகளில் குறிப்பாக, தேர்தல் நடத்தும் அதிகாரிகளாகத் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களை நியமித்து அவர் சதி செய்கிறார். தனது ஆதரவாளர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஏஜெண்டுகளை அனைத்து முக்கிய பதவிகளில் பிரதமர் நியமிப்பதாகவும், சட்டம், விதிகளைப் பின்பற்றாத நபர்களுக்கே அவர் அதிகாரம் கொடுத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com