பிரதமர் அலுவலக துணை செயலாளராக இளம் அதிகாரி ரவி மிட்டல் நியமனம்

பிரதமர் அலுவலகத்தில் அவர் 4 ஆண்டுகள் வரை துணை செயலாளர் பதவியை வகிப்பார்.
பிரதமர் அலுவலக துணை செயலாளராக இளம் அதிகாரி ரவி மிட்டல் நியமனம்
Published on

புதுடெல்லி

சத்தீஷ்காரில் மக்கள் தொடர்பு துறை ஆணையாளராக பதவி வகித்து வரும் இளம் அதிகாரியான ரவி மிட்டல் பிரதமர் அலுவலகத்தின் துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதற்கான ஒப்புதலை மத்திய மந்திரி சபையின் நியமனங்கள் குழு அளித்துள்ளது. இதன்படி, பிரதமர் அலுவலகத்தில் அவர் 4 ஆண்டுகள் வரை துணை செயலாளர் பதவியை வகிப்பார்.

Also Read
வளர்ப்பு பூனை திடீர் மரணம்; கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
பிரதமர் அலுவலக துணை செயலாளராக இளம் அதிகாரி ரவி மிட்டல் நியமனம்

சத்தீஷ்காரில் 2016-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பிரதமர் அலுவலகத்தில், முக்கிய பொறுப்பில் பணியமர்த்தப்பட்ட இளம் அதிகாரியாக உள்ளார்.

சத்தீஷ்காரில் சம்வாத் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி என்ற கூடுதல் பொறுப்பையும் தற்போது அவர் கவனித்து வருகிறார். அவருடைய நிர்வாக திறமைகள் மற்றும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் வழியே கிடைத்த அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நம்பிக்கை கொண்டு மத்திய அரசு இந்த பணிக்கு அவரை நியமித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com