கேரள மந்திரிகள், எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு; நவம்பர்1ம் தேதி முதல் அமல்

கேரளத்தில் மந்திரிகள், எம். எல்.ஏ.க்களின் சம்பளம் கடைசியாக 2018ம் ஆண்டு உயர்த்தப்பட்டது.

கேரள மந்திரிகள், எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு
Published on: 

திருவனந்தபுரம்,

கேரளத்தில் அமைச்சர்கள், சபாநாயகர் உள்ளிட்டோருக்கு 25 சதவீதமும், எம்.எல்.ஏ.க்களுக்கு 40 சத வீதமும் சம்பளம் மற்றும் படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. முன்னாள் எம். எல்.ஏ.க்களின் ஓய்வூதியமும் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட் டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறை வேற்றப்பட்டுள்ளது.

இந்தசம்பள உயர்வு நவம்பர்1ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது. கேரளத்தில் மந்திரிகள், எம். எல்.ஏ.க்களின் சம்பளம் கடைசியாக 2018ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உயர்வுஅறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அமைச் சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரின் மாதச் சம்பளம் மற்றும் படிகள் ரூ.1.08 லட்சத்தில் இருந்து ரூ.1.33 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் மற்றும் படிகள் 70,000 இருந்து ரூ.98,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும், மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் விமானப் பயண ஒதுக்கீடு रु.50,000 இருந்து ரூ.75,000 ஆகவும், விபத் துக்காப்பீடுரூ.20லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வட்டியில்லா வாகன முன்பணம் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15லட்சமாகவும், வீடுகட்டுவதற்கான கடன் ரூ.20லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எல்.ஏ.க்களின் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.8,000ல் இருந்து ரூ.10,000 ஆகவும், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.50,000ல் இருந்து ரூ.60,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

70 வயதைக் கடந்தவர்களுக்கு கூடுதலாக ரூ.4,000, 80 வயதைக் கடந்தவர்களுக்கு ரூ.5,000 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பள உயர்வால் கேரள அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.6.91 கோடி செலவாகும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாநிலத்தின் நிதிநிலையைக்கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட சம்பளம் மற்றும் படிகளைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கேரள பா.ஜ.க. தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

X