’ஆர்எஸ்எஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் சல்மான்கான் - எம்பி சஞ்சய் ராவத் விமர்சனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா மும்பை ஒர்லி பகுதியில் உள்ள நேரு மையத்தில் நேற்று தொடங்கியது.
’ஆர்எஸ்எஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் சல்மான்கான் - எம்பி சஞ்சய் ராவத் விமர்சனம்
Published on

மும்பை,

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் பங்கேற்றதை உத்தவ் சிவசேனா கட்சியை சேர்ந்த எம்பி சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.

அதன்படி, "கூட்டம் சேர்ப்பதற்காக சல்மான் கானை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்களா? அல்லது தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பில் இஸ்லாமியர்களுக்கும் இடம் உண்டு என்பதை காட்டுவதற்கான நடிப்பா? மேலும், இதற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விளக்கம் அளிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா மும்பை ஒர்லி பகுதியில் உள்ள நேரு மையத்தில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com