டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழகத்தை சேர்ந்த சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக தமிழகத்தை சேர்ந்த சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழகத்தை சேர்ந்த சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம்
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணை வேந்தராக இருந்த ஜெகதீஷ்குமார் கடந்த வாரம் யு.ஜி.சி. தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து டெல்லி பல்கலைக்கழக முதல் பெண் துணை வேந்தராக, மராட்டியத்தில் உள்ள சாவித்திரிபாய் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் சாந்திஸ்ரீ பண்டிட் (வயது 59) என்பவரை நியமனம் செய்து மத்திய கல்வி அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது. டெல்லி பல்கலைக்கழகத்தில்தான் சாந்திஸ்ரீ பண்டிட் தனது எம்.பில். மற்றும் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இதன்மூலம் தான் படித்த பல்கலைக்கழகத்திலேயே அவர் துணைவேந்தர் பதவியை ஏற்கவுள்ளார்.

தன்னை நியமனம் செய்ததற்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துணை வேந்தராக பணியாற்ற வாய்ப்பு அளித்த பிரதமருக்கும், கல்வி மந்திரிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தை சேர்ந்த என்னை டெல்லி பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தராக நியமித்தது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.ஹ்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com