டெல்லியில் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற பள்ளிகள் திட்டம்

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதற்கான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற பள்ளிகள் திட்டம்
Published on

புதுடெல்லி,

உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் சமையல் கியாஸ் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதற்கான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் பிரதமர் மோடி, பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், பணியாளர்கள் கூடுமானவரை வீட்டில் இருந்து வேலை செய்வதை நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும், பள்ளி, கல்லூரிகள் ஆன்லைனில் செயல்பட முயற்சிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில் டெல்லி மற்றும் டெல்லி பிராந்திய நகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைனில் கல்வியை தொடர ஆலோசித்து வருகின்றன. பல நிறுவனங்கள் இதற்கான நடவடிக்கையை தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com