பாடகி ஆஷா போஸ்லே மரணம்: ராகுல் காந்தி இரங்கல்

அவரது குரலின் வழியே அவரது கலை நம்மிடையே என்றென்றும் அழியாமல் நிலைத்திருக்கும்.
பாடகி ஆஷா போஸ்லே மரணம்: ராகுல் காந்தி இரங்கல்
Published on

புதுடெல்லி,

பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92) உடல் நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்நிலையில் ஆஷா போஸ்லேவின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் அதில் தெரிவித்திருப்பதாவது:-

மாபெரும் பாடகி ஆஷா போஸ்லே அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. அவரது குரலின் வழியே, அவரது கலை நம்மிடையே என்றென்றும் அழியாமல் நிலைத்திருக்கும். இந்தத் துயர நேரத்தில், அவரது அன்புக்குரியவர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com