எஸ்.ஐ.ஆர். சர்ச்சை: இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் 30-ந்தேதி ஆலோசனை

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
எஸ்.ஐ.ஆர். சர்ச்சை: இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் 30-ந்தேதி ஆலோசனை
Published on: 

புதுடெல்லி,

தேர்தல் ஆணையத்தில் நிலவும் உள்விவகாரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள்(எஸ்.ஐ.ஆர்.) தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க நாளை மறுநாள் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் எஸ்.ஐ.ஆர். பணி தொடர்பான சர்ச்சைகள் குறித்து விவாதிக்க ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் செப்டம்பர் 30-ந்தேதி டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com