

புதுடெல்லி,
நீட் தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மூன்றாவது நாளாக ஜந்தர் மந்தரில் மாணவர்கள் குவிந்துள்ளனர். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அடுத்த உத்தரவு வரும் வரை டெல்லியில் 16 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மூடப்பட்ட நிலையங்கள் பின்வருமாறு:
1. லோக் கல்யாண் மார்க்
2. ராஜீவ் சௌக்
3. படேல் சௌக்
4. ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க்
5. பாரகம்பா சாலை
6. உச்ச நீதிமன்றம் (Supreme Court)
7. சேவா தீர்த்த்
8. ஜன்பத்
9. மண்டி ஹவுஸ்
10. சென்ட்ரல் செக்ரடேரியட்
11. ஐடிஓ (ITO)
12. டெல்லி கேட்
13. இந்திரபிரஸ்தா
14. கான் மார்க்கெட்
15. ஜோர் பாக்
16. சிவாஜி ஸ்டேடியம்