மாணவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித்ஷா பதவி விலக வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான கோபமடைந்த இளைஞர்கள் நாடாளுமன்றத்திற்கு அருகே திரண்டனர்.
பிரதமர் மோடி,அமித்ஷா,ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

இன்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நெற்று மாணவர்களின் போரட்டத்தின் போது போலீசார் அவர்கள் மீது கொடுர தாக்குதல் நடத்தினார். அதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் அமித்ஷாவுடன் பதவி விலக வேண்டும்.

இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

மன்னிப்பு கேட்க வேண்டும்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பேரணியில் மாணவர்கள் மீது தடியடிக்கு மத்திய அரசுதான் பொறுப்பு. மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்.

அரசிடம் கேட்க வேண்டும்

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காந்தி, காலையில் மற்ற எம்.பி.க்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்ததாகவும், மாணவர் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க விரும்புவதாக அவரிடம் தெரிவித்ததாகவும் கூறினார். அவர் அரசிடம் கேட்க வேண்டும் என்று கூறினார்.

தேர்வு முறை சீர்குலைந்தது

"இது மாணவர்களின் பிரச்சினை, மக்கள் தாக்கப்படும் விதம் முற்றிலும் 'இந்தியப் பண்பற்றது'. நேற்று நடந்த சம்பவத்திற்கு மோடி மன்னிப்பு கூட கேட்கவில்லை. இந்த மாணவர்கள் கல்வி மற்றும் தேர்வு முறைகளுக்கு எதிராக போராடுகிறார்கள். கல்வி முறையும் தேர்வு முறையும் சீர்குலைந்து, இல்லாமல் போய்விட்டது என்பது நாடு முழுவதற்கும் தெரியும்.

போலிசார் தடியடி

மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான கோபமடைந்த இளைஞர்கள் நாடாளுமன்றத்திற்கு அருகே திரண்டனர். ஆனால், அவர்கள் மீது போலிசார் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் தாக்குதல் நடத்தினார்கள்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

மாணவர்கள் போரட்டத்தில் தவறொன்றும் இல்லை. பிரதமர் ஏன் மௌனமாக இருக்கிறார்? காரணம் என்ன? அவர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் காவல்துறையினர் மாணவர்களை தாக்கும் இந்த முட்டாள்தனத்தை நிறுத்த வேண்டும்.

உள்துறை அமைச்சகம்

கண்டிப்பாக பிரதான் பதவி விலக வேண்டும். ஆனால் மாணவர்களை அடித்து தாக்கியது உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் டெல்லி காவல்துறைதான். எனவே, இதற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறைமந்திரி அமித்ஷா உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவருக்குத் தலைமை தாங்கும் பிரதமர் மோடியும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் பதவியை விட்டு விலக வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com