10-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

10-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
10-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
Published on

மலப்புரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியை சேர்ந்தவர் நாசர் கருத்தேனி என்கிற அப்துல் நாசர்.இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், பல திரைப் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் அப்துல் நாசர், தான் பணிபுரியக்கூடிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் வண்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அப்துல் நாசரை கைது செய்தனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com