கண்ணூரில் பயங்கர விபத்து... பேருந்து மோதி 2 கல்லூரி மாணவிகள் கவலைக்கிடம்!

பேருந்து ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணூரில் பயங்கர விபத்து... பேருந்து மோதி 2 கல்லூரி மாணவிகள் கவலைக்கிடம்!
Published on

கண்ணூர்,

அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில், சாலையை கடக்க முயன்ற 2 கல்லூரி மாணவிகள் படுகாயமடைந்தனர். இருவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேருந்து மோதி விபத்து

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தவக்காரா பகுதியில் தனியார் கல்வி நிறுவனத்தில் பி.எஸ்சி. படித்து வரும் இரு மாணவிகள் இன்று காலை சுமார் 9 மணியளவில் தவக்காரா பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த பகுதி வழியே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக மாணவிகள் இருவர் மீதும் பயங்கரமாக மோதியது.

பேருந்து மோதிய வேகத்தில் மாணவிகள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை

இது குறித்து கண்ணூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com