பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் 2 பேர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் 2 பேர் கைது
Published on: 

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்ததாகக் கூறி கடற்படை ஊழியர் பிரதீப் முகர்ஜி, ஒப்பந்த ஓட்டுனர் அன்னம் சாய் வரபிரசாத் ஆகிய இருவரை ஆந்திரபிர தேச போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த வழக்கில் தற்போது மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாகப்பட்டி னம் கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பணியாற்றிய பொங்கு ரவி. சக ஊழியர் கடாரி சீனிவாஸ் ஆகியோர் கப்பல்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள் குறித்த ரகசியத் தகவல்களை 'ஏஞ்சல் பயல்' என்ற பெயரில் தொடர்புகொண்ட பெண்ணிடம் பணத்துக் காகப் பகிர்ந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. சீனிவாஸ் சவுதி அரேபியாவில் இருந்து திரும்பியபோது டெல்லி விமான நிலையத்தில் பிடிபட்டார். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com