பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்
Published on

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2023-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதனை 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமல்படுத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ஆனால் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதிகளை மறுவரையறை செய்து, 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது.இந்தநிலையில் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து, மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு நினைத்தது.

அதன்படி நேற்று முன்தினம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொ டர் தொடங்கியது. அன்றைய தினமே 3 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை இல்லாததால் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கேபினட் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. காலை 11.30 மணிக்கு கேபினட் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com