மும்பை பயங்கரவாத தாக்குதல் போல்‘ஐதராபாத்திலும் தாக்குதல் நடத்துவோம்’-லஷ்கர் இ தொய்பா மிரட்டல்

கடந்த 18-ந்தேதி காஷ்மீரில் ஜங்கல்போரா கிராமத்தில் லத்தீப் பட் என்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி பாதுகாப்பு படை வீரர்களால் சுட் டுக்கொல்லப்பட்டார்
மும்பை பயங்கரவாத தாக்குதல் போல்‘ஐதராபாத்திலும் தாக்குதல் நடத்துவோம்’-லஷ்கர் இ தொய்பா மிரட்டல்
Published on: 

பயங்கரவாதி சுட்டுக்கொலை

மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குத லில் 166 பேர் உயிரிழந்தனர். சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரெயில் நிலையம், டிரைடென்ட் ஓட்டல், தாஜ்மகால் பேலஸ் ஓட்டல், ஆஸ்பத்திரிகள், நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட முக்கிய இடங்கள் தாக்கப்பட்டன. சுமார் 60 மணி நேரம் நீடித்த இந்த முற்றுகையின் போது, இந்திய பாதுகாப்பு படையினரால் 9 பயங்க ரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 18-ந்தேதி காஷ்மீரில் ஜங்கல்போரா கிராமத்தில் லத்தீப் பட் என்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி பாதுகாப்பு படை வீரர்களால் சுட் டுக்கொல்லப்பட்டார். லத்தீப் பட் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக ஐத ராபாத்தில் வரும் 26-ந்தேதி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படும் என ஐத ராபாத் போலீஸ் சிறப்பு பிரிவின் இணை கமிஷனருக்கு மின்னஞ்சல் வந்தது.

பாதுகாப்பு அதிகரிப்பு

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என கூறப் பட்டு உள்ள அந்த மின்னஞ்சலில் 2 குண்டுவெடிப்புகள் நடத்தப்படும் என அச் சுறுத்தப்பட்டுள்ளது. கச்சிகுடாவில் உள்ள ஓட்டல் டூரிஸ்ட் பிளாசா, கச்சிகுடா ரெயில் நிலையம் ஆகியவை இலக்குகளாகும். இதில் குறைந்தது 300 பேர் கொல்லப்படலாம் என கூறப்பட்டு உள்ளது.இந்த அச்சுறுத்தலை தொடர்ந்து போலீசார் இந்த இடங்களிலும் மற்ற முக்கிய பொது இடங்களிலும் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனைகளை தீவிரப்படுத்த சிறப்பு பிரிவு போலீசாருக்கு அறிவு றுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. சந்தேகத்திற்கிடமான நபர்கள், கவனிக்கப்படாத பொருட்கள், வாகனங்கள் மற்றும் அசாதாரணமான நடவடிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த மிரட்டல் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறியவும், அந்த மிரட் டல் நம்பகமானதா என்பதை சரிபார்க்கவும் அதிகாரிகள் விசாரணையில் இறங்கி இருக்கின்றனர்.

X