

ஆப்பிரிக்கா நாடான உகாண்டாவில் எபோலா தொற்று நோய் தீவிரமாக பரவி வருகிறது. இதையொட்டி இந்தியர்கள் ஆப்பி ரிக்க நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது
மேலும் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த நிலையில் உகாண்டாவில் இருந்து இந்தியா வுக்கு சமீபத்தில் வந்த 28 வயது பெண் ஒருவருக்கு உடல்வலி உள்ளிட்ட லேசான அறிகுறிகள் ஏற்பட்டதால், பெங்களூருவில் உள்ள அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் தனிமைப்படுத் தப்பட்டு கண்காணிக்கப்பட்டார்.
அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் பரிசோதனை செய்ததில், எபோலா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.அந்த பெண் தற்போது நல்ல உடல்நிலையிலுள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர். தற்போது இந்தியாவில் எபோலா பாதிப்பு எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றும், மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.