பலாப்பழம் தலையில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

படுகாயம் அடைந்த தொழிலாளியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மன்னார் காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலாப்பழம் தலையில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
Published on

பாலக்காடு,

பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே புலாப்பட்டா சீனிக்கடவு பகுதியை சேர்ந்தவர் சசி (வயது 47). தொழிலாளி. இவர் கடந்த 27-ந் தேதி அரிவாளுடன் கூடிய மூங்கில் கம்பு மூலம் பலா மரத்தில் இருந்த பலாப்பழங்களை பறித்து கொண்டிருந்தார். 2 பலாப்பழங்களை பறித்த பிறகு, மேலும் ஒரு பலாப்பழத்தை பறிக்க முயன்றார். அப்போது மரத்தில் இருந்து பலாப்பழம் சசியின் தலையில் விழுந்தது.

தொழிலாளி உயிரிழப்பு

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மன்னார் காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்தல் மன்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி சசி உயிரிழந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com