காஷ்மீர்: ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 37 பேர் பஸ்சில் வருகை

ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 37 பேர் பஸ்சில் காஷ்மீருக்கு வந்தனர்.
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ளவர்கள், எதிர்தரப்பில் உள்ள தங்கள் உறவினர்களை பார்ப்பதற்கு வசதியாக, வாரம் ஒருமுறை பஸ் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு, இந்த சேவை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து புறப்பட்ட இந்த பஸ்சில், காஷ்மீரை சேர்ந்த 6 பேர், ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்றனர். ஏற்கனவே அங்கிருந்து வந்த 21 பேரும், அந்த பஸ்சில், ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு திரும்பிச் சென்றனர்.

அதுபோல், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து புறப்பட்ட பஸ்சில் 37 பேர் பயணம் செய்து, காஷ்மீருக்கு வந்தனர். இவர்களில், 11 பெண்களும், 3 குழந்தைகளும் அடங்குவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com