கார்கில் வெற்றி தினத்தை நினைவூட்ட லே - டெல்லி சைக்கிள் பயணம்

கார்கில் போர் வெற்றி தினத்தின் நினைவினையொட்டி 1,100 கி.மீ தூர இமயமலை சைக்கிள் பயணம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி வெற்றி தினம் அனுசரிக்கப்படுகிறது.
கார்கில் வெற்றி தினத்தை நினைவூட்ட லே - டெல்லி சைக்கிள் பயணம்
Published on

புதுடெல்லி

கடந்த 11 ஆம் தேதி காஷ்மீரின் லே பகுதியில் துவங்கிய இப்பயணம் வரும் 26 ஆம் தேதி அன்று டெல்லியை வந்தடையும். இது பற்றி கருத்து தெரிவித்த ராணுவ அதிகாரி யொருவர், சுமார் 1,100 கிலோ மீட்டர் பயணிக்கும் இந்த அணி மன உறுதியை வெளிப்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி முன்னாள் வீரர்கள் மற்றும் சக நாட்டவரையும் சென்றடையும் வகையில் பயணிப்பார்கள். அவர்கள் செல்லும் வழியெங்கும் அமைதி, ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் கார்கில் போரின் ஹீரோக்கள் காண்பித்த வெல்ல இயலாத துடிப்பும், வீரத்தையும் பற்றிய செய்தியை பரப்புவார்கள் என்றார்.

இந்திய ராணுவத்தின் ஃபார் எவர் இன் ஆப்ஸ் எனும் பிரிவின் 15 உறுப்பினர் கொண்ட அணியினர் இப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

பலதரப்பட்ட எதிர்மறையான விஷயங்களை கடந்து 1999 ஆம் ஆண்டில் நடந்த கார்கில் போரில் இந்தியா வென்றதை நினைவூட்டும்படி இப்பயணம் அமைகிறது. சைக்கிள் பயணமானது ரோஹ்தாங் பாதை, பல வண்ண இமயமலைப் பகுதிகள் ஜம்மு & காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் மாநிலங்களை கடந்து வட இந்தியாவின் சமவெளியை அடையும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com