ஆபத்துடன் கை குலுக்கிய மோடி - காட்டுக்குள் ஒரு சாகச பயணம்

பிரதமர் மோடி காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொண்டு, ஆபத்துடன் கை குலுக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Published on

நீங்கள் இந்தியாவின் மிக முக்கியமான மனிதர். உங்களை உயிரோடு வைத்துக்கொள்வது எனது வேலை என பியர் கிரில்ஸ் தமாஷாக சொன்னாலும், அது தமாஷ் அல்ல. உண்மைதான். அத்தனை கடினமான பயணம்தான் அது. 130 கோடி மக்களின் பிரதமர் அவர் கைகளில்.

மோடியின் பள்ளிப்பருவம் எப்படி இருந்தது என்று பியர் கிரில்ஸ் கேட்டபோது, மோடி அந்தக் காலத்துக்கே சென்று விடுகிறார்.

உலகத்துக்கு இந்தியாவின் செய்தி என்றால் அது வாசுதெய்வ குதும்பகம்.. அதாவது ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்பதுதான்.

100 ஆண்டுகளில் முதல் பிரதமர்

ஜிம் கார்பெட் தேசிய பூங்காவின் அடர்ந்த காட்டுக்குள்ளே ஒரு நதியை கடந்து செல்ல வேண்டி வந்தது. மிக சாதாரணமான மிதவை மூலம் மோடி அப்படி அந்த நதியை கடந்தபோது, பியர் கிரில்ஸ் வியந்து போய் சொன்னார். 100 ஆண்டுகளில் இப்படி இந்த ஆற்றை கடந்து சென்ற முதல் பிரதமர் நீங்களாகத்தான் இருக்க முடியும்!.

முதலையை வீட்டுக்கு கொண்டு வந்த மோடி

மோடி சிறுவனாக இருந்தபோது உள்ளூரில் இருந்த ஒரு குளத்துக்கு குளிக்கச்சென்றிருந்தபோது அங்கிருந்து ஒரு முதலைக்குட்டியை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார்.

இதுபற்றி மோடி நினைவுகூர்ந்தபோது, இது தவறு என்று என் அம்மா உணர்த்தினார்கள். நீ இதைச் செய்திருக்கக்கூடாது, திரும்பக்கொண்டு போய் குளத்தில் விட்டு விட்டு வா என்று அம்மா சொன்னார்கள். அதன்படியே செய்தேன் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com