டெல்லியில் இன்று மேலும் 2,033 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 2,033 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இதனால் தற்போது அங்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்திருப்பதாக டெல்லி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று மேலும் 2,033 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,04,864 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 3,213 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 3,982 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதன்மூலம் இதுவரை 78,199 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் தற்போது 23,452 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com