எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் தக்க பதிலடி

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
Published on

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா, கதுவா மாவட்டங்களில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக துப்பாக்கிகள், தானியங்கி இயந்திரங்கள் மூலமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

நீண்ட தூரம் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஆயுதங்கள் மூலமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதால், எல்லையோர கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில், எல்லையோர கிராமங்களில் உள்ள 10 வீடுகள் லேசான சேதம் அடைந்தன. பொதுமக்கள் இருவர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com