பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியீடு, மாவட்டத்தில் 88.45 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் 88.45 சதவீதம் மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
Published on: 

கடலூர்,

பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 974 மாணவர்கள், 16 ஆயிரத்து 41 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 15 பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட் டது. அதில் 11 ஆயிரத்து 942 மாணவர்கள், 14 ஆயிரத்து 606 மாணவிகள் என மொத்தம் 26 ஆயிரத்து 548 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 88.45 சதவீத தேர்ச்சியாகும். முன்னதாக தேர்வு முடிவுகள் காலை 9.30 மணி அளவில் வெளியானது. இதில் மாணவ-மாணவிகளுக்கு செல்போனில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன. இதை மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே அறிந்து கொண்டனர்.

இணைய தளத்திலும் மாணவ- மாணவிகள் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொண்டனர். சில மாணவர்கள் தங்களின் பள்ளிக்கூடங்களுக்கும் வந்து தேர்வு முடிவுகளை அறிந்து சென்றனர். மாவட்டத்தில் 88.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதால் மாநில அளவில் கடலூர் மாவட்டம் 26-வது இடத்தை பிடித்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com