சட்டமன்ற தேர்தல் அறிக்கையை தயாரிக்க 7 பேர் கொண்ட குழு - பா.ம.க. அறிவிப்பு

தேர்தல் அறிக்கையை அன்புமணி ராமதாஸ் இறுதி செய்து வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் அறிக்கையை தயாரிக்க  7 பேர் கொண்ட குழு - பா.ம.க. அறிவிப்பு
Published on

சென்னை,

2026 சட்டமன்ற தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக பா.ம.க. தலைமை நிலையம் (அன்புமணி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக கீழ்க்கண்டவர்களைக் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி அமைத்திருக்கிறார்கள்.

1. மருத்துவர் இரா. செந்தில் - குழுத் தலைவர்

முன்னாள் மக்களவை உறுப்பினர்

2. முனைவர் அரங்க வேலு இ.ஆ.ப (ஓய்வு)

முன்னாள் தொடர்வண்டித்துறை இணையமைச்சர்

3. முனைவர் கோ. தன்ராஜ்

முன்னாள் மக்களவை உறுப்பினர்

4. வழக்கறிஞர் கே.பாலு

செய்தித் தொடர்பாளர்

5. கோ. ஆலயமணி

தலைவர், தமிழ்நாடு உழவர் பேரியக்கம்

6. இர. அருள்

செயலாளர், பசுமைத் தாயகம்

7. கே. பொன்மலை

சமூக முன்னேற்ற சங்கம்

பல்வேறு துறைகளின் வல்லுனர்கள், பல்துறை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை அறிந்து இக்குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்து கட்சித் தலைமையிடம் அளிக்கும். கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தேர்தல் அறிக்கையை இறுதி செய்து வெளியிடுவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com