எதிர்க்கட்சிகள் அமளி; நாடாளுமன்ற மேலவை மதியம் 2 மணிவரை ஒத்தி வைப்பு

எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற மேலவை மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற மாநிலங்களவையில், மறைந்த முன்னாள் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம் ஜெத்மலானி உள்பட 10 முன்னாள், இந்நாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பொதுவாக, இரங்கல் தீர்மானம் மீது உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்படுவது இல்லை.

ஆனால், இந்த மரபுக்கு மாறாக, உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். அப்போது, அருண் ஜெட்லி குறித்து பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள் புகழாரம் சூட்டினர். பின்னர், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பிற்பகல் 2 மணி வரை சபை தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையே, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் மிர் பயாஸ், நசீர் அகமது லாவே ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், இன்று 2வது நாளாக நாடாளுமன்ற மேலவை கூடியது. இதில் காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியான பரூக் அப்துல்லாவை காவலில் வைத்தது சட்டவிரோதம் என்றும் அவர் சபைக்கு வர அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இதேபோன்று சோனியா காந்தி குடும்பத்துக்கும், மன்மோகன் சிங்குக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com